பில்லிங்
கார்ட்டில் ஒரு பொருளை சேர்ப்பது எப்படி?
நியூ ஆர்டர் பட்டனை க்ளிக் செய்த பிறகு வரும் கேட்டலாக் ஸ்கிரீனில் இருந்து நீங்கள் புதிய பொருட்களை சேர்க்கலாம். பொருட்களை சேர்க்க மூன்று வழிகள் உள்ளன:
 • கனெக்ட் செய்யப்பட்டிருக்கும் பார்கோட் ஸ்கேனரைப் பயன்படுத்தி பொருளின் பார்கோடை ஸ்கேன் செய்தல்
 • சர்ச் பாரைப் பயன்படுத்தி பொருளினைத் தேடுதல்
 • கேட்டலாக்கில் ஸ்க்ரோல் செய்து ஒரு பொருளின் மீது க்ளிக் செய்வதன் மூலம் சேர்த்தல்
பில்லிங் செய்வதற்கு முன்பு ஒரு பொருளின் விலையை நான் எப்படி எடிட் செய்ய முடியும்?
ஐட்டத்தை வலது புறம் ஸ்வைப் செய்து எடிட் ப்ரைஸ் ஆப்ஷனில் க்ளிக் செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட ஆர்டரில், பொருளின் விலையை எடிட் செய்யலாம்
ஒரு ஆர்டரை தற்காலிகமாக நிறுத்திவிட்டு நான் வேறொரு புதிய ஆர்டரைத் தொடங்க முடியுமா?
உங்கள் அப்ளிகேஷனில் உள்ள கார்ட் ஸ்கிரீனில் கீழேக் காணப்படும் Queue பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் ஒரு ஆர்டரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்
ஒரு இன்வாய்ஸை எப்படி ரீஃபண்ட் செய்வது?
 • டாஷ்போர்ட் > சேல்ஸ் என்பதற்குள் செல்லவும்
 • இன்வாய்ஸ் டேபை தேர்வு செய்து ரீஃபன்ச் செய்ய வேண்டிய இன்வாய்ஸைத் தேடவும்
 • ரீஃபண்ட் என்பதை க்ளிக் செய்யவும். இது உங்களை பில்லிங் செக்‌ஷனுக்கு கொண்டு செல்லும்
 • இடதுபுறம் ஸ்வைப் செய்து ரீஃபண்ட் செய்யப்பட வேண்டியதில் டெலிட் ஐட்டம்ஸ் என்பதை க்ளிக் செய்யவும்
 • ப்ரொசீட் என்பதி க்ளிக் செய்து ரீஃபண்ட் செய்வதற்கான பேமெண்ட் மோடினைத் தேர்ந்தெடுக்கவும்
திறந்திருக்கும் ஒரு ஆர்டரை எப்படி அழிப்பது?
திறந்திருக்கும் ஆர்டரை அழிக்க கார்ட்டின் மேல் வலது மூலையில் இருக்கும் டிஸ்கார்ட் ஐகானை க்ளிக் செய்யவும் குறிப்பு: ஆர்டர் நிறைவு செய்யப்பட்டுவிட்டால் அதனை அழிக்க முடியாது
IMEI மற்றும் வாரண்டி போன்ற ஒரு பொருளின் விவரங்களை சேர்ப்பது எப்படி?
 • இந்த விவரங்களை சேர்க்க வேண்டிய பொருளின் வலது புறம் ஸ்வைப் செய்து ப்ராப்பர்டீஸ் என்பதை க்ளிக் செய்யவும்.
 • விண்டோவில் IMEI மற்றும் வாரண்டி போன்ற தேவையான விவரங்களை உள்ளிடவும்.
கார்ட் ஸ்கிரீனில் உள்ள “ஆட் கமெண்ட்”இன் பயன் என்ன?
இந்த வசதியானது குறிப்பிட்ட பரிவர்த்தனை குறித்த கூடுதல் விவரங்களை சேர்க்க உதவும். இது இன்வாய்ஸில் ப்ரிண்ட் செய்யப்படும்.
ஐட்டம் மற்றும் கார்ட் லெவல்களுக்கான டிஸ்கவுண்டை எப்படி அப்ளை செய்வது?
ஐட்டம் லெவல் டிஸ்கவுண்ட்ஸ் :
 • டிஸ்கவுண்ட் வழங்க விரும்பும் ஐட்டத்தின் வலது புறம் ஸ்வைப் செய்யவும்
 • எடிட் ப்ரைஸ் என்பதை க்ளிக் செய்து, டிஸ்கவுண்ட்ஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
 • பெர்சண்டேஜ், ஃப்ளாட் அல்லது கூப்பன் டிஸ்கவுண்ட் போன்றவற்றில் இருந்து டிஸ்கவுண்டின் வகையைத் தேர்ந்தடுக்கவும்.
 • தேவையான டிஸ்கவுண்டின் மதிப்பை உள்ளிட்டு அப்ளை என்பதை க்ளிக் செய்யவும்
கார்ட் லெவல் டிஸ்கவுண்ட்ஸ்:
 • கார்ட்டின் கீழ்ப்புறத்தில் இருக்கும் கிராண்ட் டோட்டல் அல்லது டிஸ்கவுண்ட் என்பதை க்ளிக் செய்யவும்
 • பெர்சண்டேஜ், ஃப்ளாட் அல்லது கூப்பன் டிஸ்கவுண்ட் போன்றவற்றில் இருந்து டிஸ்கவுண்டின் வகையைத் தேர்ந்தடுக்கவும்
 • தேவையான டிஸ்கவுண்டின் மதிப்பை உள்ளிட்டு அப்ளை என்பதை க்ளிக் செய்யவும்
ஒரு இன்வாய்ஸை டெலிட் செய்ய முடியுமா?
இல்லை. ஒரு இன்வாய்ஸை டெலிட் செய்ய முடியாது. இருந்தாலும் சேல்ஸ் டேட்டாவை டேலி செய்ய ரீஃபண்ட் ப்ராசஸ் செய்யலாம்.
ஸ்மார்ட் ரீடெய்ல் டிஜிட்டல் இன்வாய்ஸ்களை சப்போர்ட் செய்யுமா?
ஆம், எங்களின் POS, SMS மற்றும் இமெயில் இன்வாய்ஸ்களை சப்போர்ட் செய்யும். வாடிக்கையாளர்களுக்கு இன்வாய்ஸை அனுப்ப அவர்களின் இமெயில் ஐடி மற்றும் மொபைல் எண்ணை கஸ்டமர் டீட்டெய்ல்ஸ் செக்‌ஷனில் எண்டர் செய்ய வேண்டும்.
சேல்ஸ் சேனல்ஸ் என்பது என்ன?
சேல்ஸ் சேனல்ஸ் என்பது நீங்கள் பொருட்களை விற்கும் வித்தியாசமான முறைகளாகும். உதா: இன்-ஸ்டோர்/வாக்-இன், ஹோம் டெலிவரி, ஆன்லைன் சேல்ஸ் போன்றவை
பில்லிங்கிற்கு சேல்ஸ் சேனலை எவ்வாறுத் தேர்ந்தெடுப்பது?
பில்லிங் செக்‌ஷனில், மேற்புறத்தில் காணப்படும் சேல்ஸ் சேனலை க்ளிக் செய்யவும். இங்கு உங்களால் உருவாக்கப்பட்ட சேல்ஸ் சேனல்களின் லிஸ்ட் பாப்-அப் ஆக தோன்றும்
பேக்-எண்ட் போர்டலில் செய்யப்பட்ட மாற்றங்களை எவ்வாறு சிங்க் செய்வது?
நடப்பு பக்கத்தில் வலப்புறம் ஸ்வைப் செய்து “சிங்க் ஸ்டோர்” என்பதை க்ளிக் செய்யவும்
பில்லிங்கின் போது வாடிக்கையாளரின் விவரங்களை எண்டர் செய்வது அவசியமா?
இல்லை. எங்களது POSஇல் வாடிக்கையாளரின் விவரங்கள் அவசியம் கிடையாது. இருந்தாலும் அதனை அவசியம் என செய் கொள்ளலாம்